Advertisment

பேருந்து மோதியதில் தீப்பிடித்த கார்... காரில் கரிக்கட்டையான மூவர்!

கார்நாடக மாநிலத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தனியாருக்கு சொந்தமான பேருந்து அதிவேகமாக சென்றுள்ளது. அதே நேரத்தில் எதிரே வந்த காரின் மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதி உள்ளது. இதன் காரணமாக இரண்டு வாகனங்களும் தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Advertisment

இதற்கிடையே பேருந்தில் உள்ளவவர்கள் அனைவரும் பத்திரமாக இறங்கிய நிலையில், கார் முழுவதும் தீப்பிடித்தது. இதன் காரணமாக காரில் இருந்த மூவரை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயில் கருகிய மூவரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

road accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe