Advertisment

ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக 3 பேர் கைது; சிபிஐ அதிரடி

nn

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2 ஆம் தேதி சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பெரும் விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அதே சமயம் இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலும் விசாரணை நடந்தது. அந்த விசாரணை அறிக்கையில், பாகநாகாவில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு மனித தவறே முக்கியக் காரணமாகும். மேலும் தவறாக சிக்னல் கொடுத்ததன் விளைவாகத்தான் இந்த விபத்து நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

Advertisment

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வந்த நிலையில், மூன்று பேரை சிபிஐ கைது செய்துள்ளது. சீனியர் பிரிவு பொறியாளர் அருண்குமார் மோகந்தா, பொறியாளர் முகமது அமீர்கான், தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகியோரை சிபிஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

Train
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe