3 army officers passed away in kashmir

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இந்திய ராணுவத்திற்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கர்னல் மன்பிரீத் சிங் தலைமையிலான ராணுவப்படை, ஆனந்த் நாக் என்ற மாவட்டத்தின் கேகெர்நாக் பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் பணியைத் தொடங்கியது. செவ்வாய் கிழமை மாலை தொடங்கிய இந்த தேடுதல் வேட்டை, இரவு நிறுத்தப்பட்டு மீண்டும் அதிகாலை தொடங்கியுள்ளது. திடீரென எதிர்பாராத விதமாக ராணுவ வீரர்களைப் பார்த்து பயங்கரவாதிகள் சுட ஆரம்பித்துள்ளனர்.

Advertisment

அப்போது இந்த ராணுவப் படைக்குத் தலைமை தாங்கிய கர்னல் மன்பிரீத் சிங் மீது குண்டுகள் பாய்ந்தது. அதில் சம்பவ இடத்திலேயே காணல் மன்பிரீத் சிங் உயிரிழக்க, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பலமணி நேரம் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்குமான சண்டை தொடர்ந்துள்ளது. அப்போது, இந்திய ராணுவ மேஜர் ஆஷிஸ், துணை மேலதிகாரி ஹுமாயன் பாட் இருவரும் மீது குண்டுகள் பாய்ந்ததில் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்குப் பாகிஸ்தானில் இயங்கும் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Advertisment

இதனிடையேஆனந்த் நாக் மாவட்டத்தில் நடந்த சம்பவம் போலேவேரஜோரி, மதியானி காலா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவவீரர்களுக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டநிலையில், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ராணுவம்-பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதல் சண்டையில், நிறைய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியானது.