Advertisment

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: பட்டியலிடப்பட்ட 26 மசோதாக்கள்!

parliament

Advertisment

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதிவரை 20 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்துவதற்கும், நிறைவேற்றப்படுவதற்கும்26 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவற்றுள் முக்கியமாக, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021 குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யவும், அரசே அதிகாரபூர்வ கிரிப்டோகரன்சியை வெளியிடவும் வழிவகை செய்யும் ‘கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறைமசோதா 2021’ம் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும்,இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயப்படுத்தும் வகையிலான வங்கிச் சட்டங்கள் (திருத்த) மசோதா 2021-ம் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட பட்டியலிடப்பட்டுள்ளது.

Parliament winter session
இதையும் படியுங்கள்
Subscribe