Advertisment

ஒரே நேரத்தில் 25 தலைவர்கள் விலகல்... என்ன நடக்கிறது பாஜக -வில்..?

தேர்தலில் போட்டியிட சீட் தராததால் அருணாச்சல பிரதேச பாஜக கட்சியிலிருந்து ஒரே நேரத்தில் 25 மூத்த அரசியல்வாதிகள் விலகியுள்ளனர்.

Advertisment

modi

வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒன்றாக நடைபெற இருக்கிறது. அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் 60 இடங்களில் 54 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

இதில் பல மூத்த பாஜக -வினர் சீட் கேட்டிருந்த நிலையில், அவர்களுக்கு சீட் தராமல் வேறு சிலருக்கு சீட் தரப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த முன்னனி நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனால் பாஜக கட்சி தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பாஜகவில் இருந்து விலகி, கான்ராட் சங்மாவின், தேசிய மக்கள் கட்சியில்(என்பிபி) சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் பாஜகவின் பொதுச்செயலாளர் ஜர்பும் காம்பின், உள்துறை அமைச்சர் வெய், சுற்றுலாத்துறை அமைச்சர் ஜார்கர் காம்லின் ஆகியோர் முக்கியமான தலைவர்கள் ஆவர்.

loksabha election2019 modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe