இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ளது. மேலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கர்நாடக மாநிலம்சாமராஜநகர் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 24மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 24 பேரில், கரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடங்குவர். மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் 24 மணி நேரத்தில்24 பேர் பலியானதுகடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சாமராஜநகர் மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா, நாளை (04.05.2021) அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.