Skip to main content

சாராய ஊறலைக் குடித்துவிட்டு போதையில் கிடந்த 24 யானைகள்

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

24 elephants lying intoxicated after drinking alcoholic liquor

 

சாராய வியாபாரிகள் போட்டு வைத்திருந்த சாராய ஊறலைக் கண்ட யானைக்கூட்டம் ஒன்று சாராயத்தைக் குடித்துவிட்டு கூட்டமாக போதையில் படுத்திருந்த சம்பவம்  ஒடிஷாவில் நிகழ்ந்துள்ளது.

 

ஒடிசா மாநிலம், கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள ஷிலிபாடா முந்திரிக்காட்டு பகுதியில், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில், ஊறலைத் தேடிச் சென்ற மக்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. காரணம் பானையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஊறலை யானைக்கூட்டம் ஒன்று குடித்தது தெரியவந்தது. மேலும் சுமார் 24 யானைகள் ஊறல் பானைகளுக்கு அருகிலேயே போதையில் படுத்து கிடந்தன. பின்னர் எதுவும் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் மக்கள் சென்றனர்.

 

ஏற்கனவே, மது பாட்டில்களை வனப்பகுதியில் வீசக்கூடாது. அவை விலங்குகளின் கால்களைச் சேதப்படுத்தும். குறிப்பாக யானையின் கால்களை பாட்டில் சில்லுகள் காயப்படுத்தும் என்பது போன்ற விழிப்புணர்வுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிலையில், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த ஊறலை அருந்தி காட்டு யானைகள் போதையில் கிடந்த இந்த சம்பவத்திற்கு சம்பந்தட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்பு!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Mohan Charan Majhi Chief Minister of Odisha sworn in

மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கோட்டையாக இருந்த ஒடிசா மாநிலத்தில் 1990 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியே நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்த பிஜு பட்நாயக், அம்மாநிலத்தில் முதல்வராக பணியாற்றி வந்தார்.

இதனையடுத்து பிஜு பட்நாயக், ஜனதா தளம் கட்சியில் இணைந்து, 1995 ஆம் ஆண்டில் முதல்வராக பொறுப்பு வகித்து வந்தார். பிஜு பட்நாயக் மறைவுக்குப் பிறகு, அவருடைய மகன் நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பின்பு கடந்த 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் அமோக வெற்றி பெற்று அம்மாநில முதல்வரானார். இத்தகைய சூழலில் தான் 147 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 51 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. பா.ஜ.க 78 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களிலும், சுயேட்சை 1 இடங்களிலும் வென்றது. 

Mohan Charan Majhi Chief Minister of Odisha sworn in

இதனையடுத்து பாஜக சார்பாக ஒடிசாவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் புவனேஸ்வரில் நேற்று (11.06.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களும், பாஜக மேலிட பார்வையாளர்களுமான ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்தர் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் ஒடிசாவில் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மோகன் மாஜி கியோஞ்சர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர் ஆவார்.

இந்நிலையில் ஒடிசா மாநில முதலமைச்சராக மோகன் சரண் மாஜி இன்று (12.06.2024) பதவியேற்றார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதன்முறையாக ஒடிசாவில் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மோகன் சரண் மாஜிக்கு ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத் தொடர்ந்து பிரவதி பரிதா, கனக் வர்தன் சிங் தியோ ஆகியோர் ஒடிசா மாநில துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர். 

Mohan Charan Majhi Chief Minister of Odisha sworn in

மேலும் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான அமைச்சரவையில் சுரேஷ் பூஜாரி, ரபிநாராயண் நாயக், நித்யானந்தா கோண்ட், க்ருஷ்ண சந்திர பத்ரா, கோகுல நந்தா மல்லிக், சம்பத் குமார் ஸ்வீன், கணேஷ் ராம் சிங் குந்தியா, சூர்யபன்ஷி சூரஜ் மற்றும் பிரதீப் பாலசமந்தா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதல்வர் மோகன் சரண் மஜியின் பதவியேற்பு விழா முடிந்ததும், ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், பிஜேடி தலைவருமான நவீன் பட்நாயக்குடன் பிரதமர் மோடி சிறிது நேரம் உரையாடினார். 

Next Story

ஒடிசா முதல்வருக்கு அரசு இல்லம் தேடும் அதிகாரிகள்!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Officials are looking for a government house for the Chief Minister of Odisha

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை மத்தியில் பாஜக அமைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. இதில் 25 ஆண்டுகளாக ஒடிசா மாநிலத்தை ஆண்டு வந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம் கட்சியைப் பாஜக தனிப்பெரும்பான்மையில் வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது. 

இதனைத் தொடர்ந்து ஒடிசாவின் முதல்வராக பழங்குடியினத்தை சேர்ந்த மோகன் சரண் மாஜி என்பவரை பாஜக  அறிவித்துள்ளது. இதையடுத்து ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் மோகன் சரண் மாஜிக்கு அரசு இல்லம் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் தனது சொந்த வீட்டில் இருந்தபடியே ஆட்சி செய்தார். இதன் காரணமாக ஒடிசாவில் முதல்வருக்கு என்று தனியாக அரசு இல்லம் ஒன்று இல்லாமல் போனது. இந்த நிலையில் புதிதாகப் பதவியேற்கவுள்ள பாஜக முதல்வர் மோகன் சரண் மாஜி ஆட்சி செய்ய வீடு அல்லது அதற்குரிய இடத்தை தேடும் பணிகளை மாநில நிர்வாகத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.