ஜெர்மனியை சேர்ந்த ZF ஸ்டியரீங் கியர் உற்பத்தி (ZF Steering Gear manufactures) நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது புனே கிளை அலுவலகத்தில் பணிபுரியும் 236 பொறியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொறியாளர்கள் எல்லாம் கடந்த 2017 டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 2018 ஜனவரி 19 வரை தொடர்ச்சியாக எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி விடுமுறை எடுத்துள்ளனர். அதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அந்நிறுவனத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

zz

ZF ஸ்டியரீங் கியர் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அஷோக் லைலண்ட், டாடா மோடார்ஸ் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 26 & 27 அக்டோபர் 2018-ல் இருந்து பணி நீக்கம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment