22 tons of ganja destroyed by fire

Advertisment

கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவை குவியல் குவியலாக கொட்டிபோலீசார் தீ வைத்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அதிகப்படியான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருக்கும் நிலையில் அங்கிருந்து தமிழகத்திற்கும் கஞ்சா கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்ட 9 கோடி மதிப்புள்ள கஞ்சா, குவியல் குவியலாக கொட்டப்பட்டு போலீசாரால் எரித்து அழிக்கப்பட்டது. சுமார் 500 கடத்தல் கும்பல்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 22 டன் கஞ்சாவை பெரிய மைதானத்தில் கொட்டி போலீசார் தீவைத்து அழித்தனர்.