ஆந்திரா கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
பாப்பிகொண்டவில் 60 பேர் பயணித்த அந்த சுற்றுலா படகு கவிழ்ந்ததில் நீரில் விழுந்தவர்களில் 27 பேர் கோதாவரி ஆற்றில் நீந்தி கரை திரும்பினர். கோதாவரி ஆற்றில் மூழ்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் நீரில் மூழ்கிய22 பேரை பேரிடர் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
இறந்தவர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்துகோதாவரி ஆற்றில் அனைத்து படகு சேவைகளையும் ரத்து செய்ய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த படகு விபத்து அங்கு பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.