
நாட்டிலேயே முதல் முறையாக 21 வயது இளம்பெண் ஒருவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேரளமாநிலம்திருவனந்தபுரத்தில் உள்ள முடவன்முகன்பகுதியைச்சேர்ந்த இளங்கலை பட்டதாரியான ஆர்யா ராஜேந்திரன் என்ற 21வயது இளம்பெண், கேரளாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.
அவர் வசித்து வந்த பகுதியின்கவுன்சிலர் பதவிக்குப்போட்டியிட்டஅவர், வெற்றி பெற்றதோடு தற்பொழுது திருவனந்தபுரத்திற்கு மேயராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக, மிகவும் இளம்பெண் ஒருவர், மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே மேயர்பதவியைப்பெற்ற அவருக்கு வாழ்த்துகள்குவிந்துவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)