gun salute

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ்(வயது 66) காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக பெங்களூரூ விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 24ஆம் தேதிகாலமானார்.

Advertisment

காங்கிரஸ் ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அம்பரீஷ். அவர் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் கர்நாடக முதல்வர் நேரில் சென்று அஞ்சல் செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கடந்த 2014ம் ஆண்டே சிறுநீரகக் கோளாறு மற்றும் மூச்சு திண‌றல் காரணமாக‌ பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அம்பரீஷின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியதாலேயே அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவரது உடலுக்கு பல்வேறு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

Advertisment

இந்நிலையில், 21 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.