2024 Parliamentary Election- Congress Forms Three Committees!

வரும் 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக மூன்று குழுக்களை அமைத்தது அகில இந்திய காங்கிரஸ் கட்சி.

Advertisment

இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் விவகாரங்கள் குழு, தேர்தல் செயல்பாட்டுக் குழு, யாத்திரைக் குழு ஆகிய மூன்று குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

Advertisment

அரசியல் விவகாரங்களுக்கான குழுவில் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, மல்லிகார்ஜுன கார்கே, திக் விஜய்சிங், ஆனந்த் சர்மா, ஜிதேந்திர சிங், கே.சி.வேணுகோபால் ஆகிய எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் செயல்பாட்டுக் குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெயராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், பிரியங்கா காந்தி, ரந்தீப் சிங் சுர்ஜெவாலா, சுனில் உள்ளிட்ட எட்டு பேர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisment

உதய்ப்பூர் கூட்ட முடிவுகளை செயல்படுத்தவும் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் "பாரத் ஜோடா யாத்திரையின்" திட்டமிடலுக்கான குழுவில் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.