Skip to main content

வாக்கெடுப்பில் வெற்றி... இன்டர்போல் பொதுச்சபை கூட்டத்தை நடத்தும் இந்தியா...

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலின் 91 ஆவது பொதுச்சபை கூட்டம் 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த 91 ஆவது பொதுச்சபை கூட்டம் நடத்துவது யார் என்பது தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியாவுக்கு பெருவாரியான ஆதரவு கிடைத்ததையடுத்து, 2022 ல் இந்த கூட்டம் இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2022 annual summit of interpol to be held in india

 

 

சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக 1923 ஆம் ஆண்டு இன்டர்போல் உருவாக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் இந்தியா உட்பட 194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பு சார்பாக ஆண்டுதோறும் ஒவ்வோர் நாட்டில் பொதுக்கூட்டம் நடைபெறும். அந்த வகையில், இன்டர்போலின்  தலைமைச் செயலாளார் ஜெர்கன் ஸ்டோக், கடந்த ஆகஸ்டில் இந்தியா வந்தபோது, 2022 ஆம் ஆண்டு இந்த கூட்டத்தை இந்தியாவில் நடத்தலாம் என அமித்ஷா விருப்பம் தெரிவித்தார்.

இதனையடுத்து சிலியின் சாண்டியாகோவில் நடந்த இன்டர்போலின் 88வது பொதுச்சபைக் கூட்டத்தில், இதற்கான ஆதரவை கோரி இந்தியா சார்பில் முன்மொழியப்பட்டது. இதில் பெருவாரியான நாடுகள் இந்தியாவுக்கு சாதகமாக வாக்களித்ததால், 2022 ஆம் ஆண்டு இன்டர்போல் அமைப்பின் 91 ஆவது சந்திப்பு இந்தியாவில் நடைபெற உள்ளது உறுதியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.