Advertisment

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த ஜி.டி.பி விகிதம்...

இந்திய பொருளாதாரவளர்ச்சியில் மந்தநிலை நிலவுவதாக பொருளாதார வல்லுனர்கள் பலரும் தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான ஜி.டி.பி விகிதத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Advertisment

2019 second quater gdp touches lowest in last six years

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டிற்கான இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் என்று இருந்த நிலையில், அது தற்போது மேலும் குறைந்து 4.5 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச காலாண்டு ஜி.டி.பி ஆகும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மன்மோகன் சிங், "இந்திய பொருளாதாரத்தில் தற்போதைய நிலை மிகவும் பயப்படும் வகையில் உள்ளது. இது மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.

Indian economy gdp
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe