Advertisment

20000 கோடி...45000 டன்... உள்நாட்டு தயாரிப்பு; களமிறங்கிய விக்ராந்த்

20000 crore; 45000 tons; domestic production; Vikrant is on the field

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு எத்தகைய இன்னல்கள் வந்தாலும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisment

20000 கோடி ரூபாய் செலவில் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் காட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் கீழ் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியின் போது கடற்படைக்கு புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

Advertisment

அப்போது பேசிய பிரதமர் "உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உள்நாட்டிலேயே இவ்வளவு பெரிய கப்பலை உருவாக்கும் நாடுகளோடு தற்போது இந்தியாவும் இணைந்துள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி மண்டலம் உருவாக்கப் படும் திட்டத்தினை கூறி இந்த துறையில் சுயசார்பு இந்தியாவை உருவாக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ள தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு எத்தகைய இன்னல்கள் வந்தாலும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

262 மீட்டர் நீளமும் 60 மீட்டர் உயரமும் உள்ள இந்த கப்பல் நடுக்கடலில் பயணம் செய்தால் எத்தகைய அலைகளின் தாக்கமும் உள்ளே தெரியாதபடி கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. 45000 டன் எடைகொண்ட இந்த போர்க்கப்பலில் சிறிய மருத்துவமனை உள்ளது. இது தொடர்ந்து 7500 நாட்டிக்கல் மைல் வரை தொடர்ந்து பயணிக்கும் திறன் கொண்டது. இந்த கப்பலில் வீரர்கள் பணியாளர்கள் என மொத்தம் 1700 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். வீராங்கனைகளுக்கான தனி அறைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

India insvikranth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe