ஜூன் 1 தேதி முதல் இயக்கப்படவுள்ள 200 ரயில்களின் பட்டியல் வெளியீடு!

200 trains List Release

கரோனா வைரஸ் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதற்கிடையில் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஜூன் 1ம் தேதி முதல் ஏசி அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இந்நிலையில் ஜூன் 1 தேதி முதல் இயக்கப்படவுள்ள 200 ரயில்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த 200 ரயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு மே 21 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

corona virus covid 19 lockdown Train
இதையும் படியுங்கள்
Subscribe