20 STATES ADDITIONAL AMOUNT RS 68,825 CRORES

Advertisment

ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, அசாம், குஜராத், பீகார், மணிப்பூர், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேகாலயா, ஒடிஷா, சிக்கிம், ஹரியானா, நாகலாந்து, திரிபுரா, ஹிமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 20 மாநிலங்களுக்கு ரூபாய் 68,825 கோடி கூடுதல் கடன் திரட்ட மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வழங்காததால் மாநிலங்களுக்கு கூடுதல் கடன் மூலம் நிதி திரட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சிறப்பு இழப்பீடு வரி மூலம் கடன் வட்டியைத் திரும்பச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய நிதியமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.