Advertisment

பிளஸ்- 2 பொதுத்தேர்வு எப்போது?- மத்திய அரசு இன்று ஆலோசனை!

Advertisment

+2 public exams union ministers discussion for today

பிளஸ்- 2 பொதுத்தேர்வு எப்போது? நடத்துவது என்பது குறித்து இன்று (23/05/2021) மத்திய அரசு காணொளி காட்சி மூலம் உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறது.

Advertisment

பிளஸ்- 2 பொதுத்தேர்வை எப்போது நடத்துவது? என்பது குறித்து அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலாளர்களுடன் மத்திய அரசின் சார்பில் மத்திய அமைச்சர்கள் இன்று (23/05/2021) காலை 11.30 மணிக்கு காணொளி காட்சி மூலம் உயர்மட்ட ஆலோசனை நடத்துகின்றனர். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி,ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர். இந்த ஆலோசனையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் தீரஜ்குமார் பங்கேற்கின்றனர்.

இதில் ஒத்திவைக்கப்பட்ட மாநில கல்வி வாரிய பிளஸ்- 2 பொதுத் தேர்வு, சிபிஎஸ்இ பிளஸ்- 2 பொதுத்தேர்வு நடத்துவது பற்றியும், நீட் தேர்வு, ஜெ.இ.இ. போன்ற உயர்கல்வி நுழைவுத்தேர்வுகள் குறித்தும் மாநிலங்களின் கருத்துகளை மத்திய அமைச்சர்கள் கேட்டறிகின்றனர். அதைத் தொடர்ந்து இறுதி முடிவை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிடவுள்ளது.

+2 exams neet exam students Union Minister
இதையும் படியுங்கள்
Subscribe