ஜம்மு காஷ்மீர், சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஏற்படுத்திய தாக்குதலில் இரண்டு போலீசார்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை, அனந்த்தாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடத்த துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், தீவிரவாதிகள் சுடப்பட்ட இடத்தில் இருந்து பல ஆயுதங்கள், வெடிமருந்துகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.