Advertisment

ஓவைசி வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்த இதுவே காரணம் - கைதானவர்கள் வாக்குமூலம்

OWAISI

உத்தரப்பிரதேச மாநிலத்தில், இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம்7ஆம்தேதி வரை சட்டமன்ற தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் நேற்று உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு திரும்பியஅசாதுதீன் ஓவைசியின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

Advertisment

இதில் ஓவைசியின் வாகனம் பஞ்சர் ஆனதையடுத்து, அவர் வேறு வாகனத்தில் டெல்லி சென்றார். இந்தநிலையில் ஓவைசியின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரை உத்தரப்பிரதேச போலீஸார்கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஓவைசியின் இந்து விரோத கருத்துக்களால்காயப்பட்டதன் காரணமாகஅவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணைநடைபெற்று வருகிறது.

இதற்கிடையேஅசாதுதீன் ஓவைசிக்குமத்திய உள்துறை அமைச்சகம் z+ பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

uttarpradesh owaisi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe