Advertisment

20 நிமிட இடைவெளியில் 2 டோஸ் தடுப்பூசி - இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

ரகத

Advertisment

கர்நாடகாவில் இளைஞர் ஒருவருக்கு 20 நிமிட இடைவெளியில் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தட்சிண கன்னடா பகுதியில் நேற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் அருண் என்ற 19 வயது இளைஞர் தடுப்பூசி போட வந்துள்ளார். அவருக்கு அங்கிருந்த சுகாதார ஊழியர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் வீட்டிற்கு செல்லுங்கள் என்று அவருக்குதடுப்பூசி போட்ட பெண் கூறிவிட்டு சென்றுள்ளார். சில நிமிட இடைவெளியில் அங்கு வந்த மற்றொரு நர்ஸ் ஒருவர், அவர் தடுப்பூசி போட காத்திருப்பதாக நினைத்துக்கொண்டு அவரை கூப்பிட்டு மற்றொரு முறை தடுப்பூசி செலுத்தியுள்ளார். தடுப்பூசி போட்ட பிறகு, அந்த பெண்ணிடம் இது இரண்டாவது டோஸ் தடுப்பூசியா? என்று அந்த இளைஞர் கேட்டுள்ளார். தவற்றை உணர்ந்து அதிர்ச்சி ஆன சுகாதரத்துறை ஊழியர்கள் அவரை மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர். அவரின்உடல் மிகவும் சோர்வாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe