/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3405.jpg)
கோயம்புத்தூரில் இருந்து நேற்று முன்தினம் ஆரோவில் மற்றும் புதுச்சேரிக்கு 15 இளைஞர்கள் சுற்றுலா வந்தனர். அவர்கள் ஆரோவில் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது ராட்சச அலையில் சிக்கி மிதுன் மற்றும் மகாவிஷ்ணு ஆகியோர் கடலில் மூழ்கி மாயமானார்கள்.
தகவல் அறிந்து வந்த கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் அப்பகுதி மீனவர்கள் கடலில் மூழ்கிய இருவரின் உடலைத்தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இருவரின் உடல்களும் கடலில் மிதந்ததைக் கண்டு மீனவர்கள் உதவியோடு கரைக்கு கொண்டு சென்று பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுற்றுலா வந்த இளைஞர்கள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)