
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அந்நாட்டு அரசை எதிர்த்து வீதியில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள் முதல் ஆடம்பரப் பொருள் வரை அனைத்துமே விலை ஏறியதால் மக்கள் இந்த நிலையை சந்தித்துள்ளனர். இந்த சூழலில் இலங்கையிலிருந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் இலங்கை மக்கள் தமிழகம் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் இலங்கையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் படகு மூலம் தமிழகம் வந்த நிலையில், கடந்த வாரம் இலங்கை தமிழர்கள் 4 பேர் ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்திருந்தனர். இந்நிலையில் இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். தனுஷ்கோடி அரிசல்முனைக்கு வந்த 19 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அனுமதிக்குமாறு பிரதமரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)