
டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், உதவியாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை நேற்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனையில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் 2.82 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹவாலா பணப் பரிமாற்றம் தொடர்பாக ஏற்கனவே டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் 9ஆம் தேதி வரை அவரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் அவரின் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் வீடுகளில் நேற்றைய தினம் மூன்று குழுக்களாகப் பிரிந்து தொடர் சோதனையில் அமலாக்க துறையினர் ஈடுபட்டனர். இந்த சோதனையின் முடிவில் நேற்றைய தினம் மட்டும் 2.82 கோடி ரூபாய் ரொக்கம், 133 தங்க நாணயங்கள் உள்ளிட்ட 1.80 கிலோ எடைகொண்ட தங்கத்தை கைப்பற்றப்பற்றி இருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்க நகைகளின் புகைப்படங்களையும் அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)