Advertisment

18 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை! - உ.பி.யில் பயங்கரம்

கடைக்குச் சென்று வருவதாக வெளியே சென்ற 18 வயது சிறுமி, உயிருடன் எரிக்கப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

Bur

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் உள்ளது பாரா சாகர் பகுதி. இங்கு நேற்று மாலை தேரா பஜாருக்குச் சென்று காய்கறி வாங்கி வருவதற்காகச் சென்ற சிறுமி, உடல் முழுவதும் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டிற்கு மிக அருகாமையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து, சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். முதல்கட்ட விசாரணையில் சிறுமி உயிருடன் எரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Advertisment

ஆனால், இந்த சம்பவம் கொலைதானா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏனெனில், சிறுமி உயிரிழந்த நேரம், வீட்டிலிருந்து கிளம்பிய நேரம் என அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, அவர் தற்கொலை செய்திருப்பதற்கான வாய்ப்பிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், முழுமையான விசாரணைக்குப் பிறகே கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

burnt Alive hraja sakshimaharaj babulalgaur modi bjp yogiadhiyanath
இதையும் படியுங்கள்
Subscribe