Advertisment

கலவை இயந்திரத்திற்குள் மாநிலம் விட்டு மாநிலம் பயணம்... கூட்டமாக போலீஸில் சிக்கிய தொழிலாளர்கள்...

18 people found travelling in the mixer tank of a concrete mixer truck

கான்கிரீட் மிக்சர் வாகனத்தின் கலவை கலனில் பதுங்கியவாறு உத்தரபிரதேசம் நோக்கி பயணித்த 18 பேர் காவல்துறையிடம் சிக்கிய சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

Advertisment

கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இதனால் தினக்கூலிகள் மற்றும் புலம்பெயரத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல நாட்களாக வருமானம் ஏதும் இல்லாத காரணத்தால், நாட்டின் பல பகுதிகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயன்று வருகின்றனர். அந்த வகையில் கான்கிரீட் மிக்சர் வாகனத்தின் கலவை கலனில் பதுங்கியவாறு உத்தரப்பிரதேசம் நோக்கிப் பயணித்த 18 பேர் மத்தியப்பிரதேச போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.

Advertisment

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கான்கிரீட் மிக்சர் வாகனத்தை போலீஸார் சோதனை செய்துள்ளனர். அப்போது அவ்வாகனத்தின் கலவை கலனில் 18 பேர் பதுங்கியிருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து டி.எஸ்.பி உமகாந்த் சவுத்ரி கூறுகையில், "அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து லக்னோவுக்குசென்று கொண்டிருந்தனர். 18 பேர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

corona virus uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe