18-month-old baby brain dead; Organ donor parents

Advertisment

ஹரியானாவில் மூளைச்சாவு அடைந்த 18 மாத பெண் குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

ஹரியானா மேவத் பகுதியில் மஹீரா என்ற 18 மாத பெண் குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்தது. இதில் மூளை கடுமையாகப் பாதிப்படைந்தது. நவம்பர் 11ம் தேதி காலை மஹீரா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் குழந்தையின் உறுப்புகளைத்தானமாகக் கொடுக்க பெற்றோர் முன் வந்தனர். அதன்படி தானமாகப் பெற்ற கல்லீரல் 6 வயதுக் குழந்தைக்கும் இரு சிறுநீரகங்கள் 17 வயது நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.

Advertisment

மேலும் குழந்தையின் இருதய வால்வுகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காகப் பாதுகாப்பாகவைக்கப்பட்டுள்ளன.