
புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தினமும் 15-ஐ தாண்டியே இருந்துவருகிறது.
இந்நிலையில், நேற்று (06.05.2021) 8,210 பேரை பரிசோதனை செய்ததில் புதிதாக 1,746 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 1,079 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,373 ஆகவும், உயிரிழப்பு 920 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 54,375 பேர் குணமடைந்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 2,09,062 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)