Advertisment

"17 வயதானவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்"- இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு! 

publive-image

Advertisment

இந்திய தேர்தல் ஆணையம் இன்று (28/07/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "17 வயது நிரம்பியர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். 18 வயது நிரம்பும் வரை வாக்காளர் அட்டைக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. 17 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாநில தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

www.nsvp.in என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். புதியதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்போர் படிவம் 6-யையும், வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தம் செய்ய படிவம் 8-யையும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குவதற்கு படிவம் 7-யையும், வாக்காளர் அட்டையை, ஆதாருடன் இணைப்பதற்கு படிவம் 6B- யையும் பயன்படுத்திக் கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe