8 பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Suicide

ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், பதின்ம வயதுமிக்க சிறுமி மயக்கநிலையில் கிடப்பதாக தகவல் வெளியானது. இதையறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சிறுமி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்து, துன்புறுத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், திங்கள்கிழமை காணாமல் போனதாக அவரது தந்தை புகாரளித்ததும் தெரியவந்தது. கடந்த திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்த தன்னை, இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்த சிலர் கடத்திச்சென்று, பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், இன்று பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறுமியை தொடர்ந்து பின்தொடர்ந்ததும், கண்டிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, குற்றவாளிகள் 8 பேரின் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.