Advertisment

16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, தீயிட்டு எரிப்பு!

16 வயது சிறுமி பாலியன் வன்புணர்வு செய்து, தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

child

ஜார்க்கண்ட் மாநிலம் பாகூரில் உள்ளது கங்கர்போனா பகுதி. இங்கு தனது மாமாவின் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை, திடீரென வீட்டிற்குள் நுழைந்த அதே பகுதியைச் சேர்ந்த நபர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதிலிருந்து தப்ப சிறுமி முயற்சி செய்தநிலையில், மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

கொளுந்துவிட்டு எரிந்த தீயில் சிக்கிக்கொண்ட சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரை உடனியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுமியின் மருத்துவச் செலவுக்காக தற்போது ரூ.30 ஆயிரமும், மேலும் ஆகும் செலவுகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

Advertisment

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். குற்றவாளியின் மீது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Child abuse
இதையும் படியுங்கள்
Subscribe