16-year-old boy found hanging incident at school in kerala

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் எருமகுழி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது பென்சன் ஆப்ரகாம். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் (13-02-25) பள்ளி சென்ற பென்சன், மாலை வரை வீடு திரும்பவில்லை. இதில், பதற்றமடைந்த அவரது பெற்றோர்கள், பல இடங்களிலும் தேடி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், அடுத்த நாளான நேற்று (14-02-25) பள்ளி கட்டிடத்தின் படிக்கட்டுக்கு அருகே தூக்கில் தொங்கிய நிலையில், பென்சன் கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில், பள்ளிக்கு விரைந்து வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வீட்டுப்பாடத்தை சமர்பிக்க நேற்று கடைசி நாளாக இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில், அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த மர்ம மரணம் குறித்து, பல கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிகமான ராகிங் கொடுமைகளும், தற்கொலை வழக்குகள் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.