Skip to main content

கரோனா தொற்று: 15,000 நிதியுதவி... ஆந்திர அரசு அறிவிப்பு!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020
hd

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.

 

மராட்டியம் கரோனா பாதிப்பில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தற்போது கணிசமான அளவில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருகின்றது. குறிப்பாக ஆந்திராவில் பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. தினமும் 1000க்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பு அம்மாநிலத்தில் பதிவாகி வருகின்றது.

 

ஆந்திர முதல்வர் இந்த கரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆட்டோ ஓட்டுநர்கள், கூலி தொழிலாளர்கள் முதலியவர்களுக்கு அவர் கரோனா நிவாரணம் வழங்கியுள்ளார். இந்நிலையில், ஆந்திராவில் கரோனாவால் உயிரிழப்போரின் இறுதி சடங்குகளை மேற்கொள்வதற்காக ரூ.15,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Jaganmohan Reddy meeting with Prime Minister Modi

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று (09.02.2024) சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடிக்கு திருப்பதி ஏழுமலையான் முழு உருவச்சிலையை நினைவு பரிசாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கினார். இந்த சந்திப்பின் போது போலவரம் திட்டப்பணிகளை விரைவுபடுத்த நிதி ஒதுக்கீடு செய்யவும், மின்சாரத்துறை நிலுவைத் தொகையை தரவும் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் பிரதமர் மோடியுடன் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஆந்திர அரசியலில் கால் பதித்த அம்பத்தி ராயுடு!

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Ambati Rayudu who set foot in Andhra politics

நடந்து முடிந்த 16 ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து ஐபிஎல் டிராபி சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து டிராபிக்கு பூஜை போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர். அதன் பின்னர் சென்னை அணியின் வீரர் அம்பத்தி ராயுடு மற்றும் ரூபா குருநாத் ஆகியோர் ஐபிஎல் டிராபியுடன் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.

இதற்கு முன்னதாக தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். அதே சமயம் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அம்பத்தி ராயுடு, ஆந்திர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும், அவர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை அம்பத்தி ராயுடு சந்தித்து வாழ்த்து பெற்றார்.