style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
நேற்று உத்திரப்பிரேதச மாநிலத்தில் உள்ள காஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் திருமண ஊர்வலத்திற்கு 150 காவலர்கள் பாதுகாப்பளித்துள்ளனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் பயிலும் மாணவரான சஞ்சய் ஜாதவ், தன்னுடைய திருமண ஊர்வலத்திற்காகவும், ஊர்வலத்தில் குதிரை மீது சவாரி செய்யவும் அந்த ஊரின் உயர் சாதியினருடன் போராடி வென்றுள்ளார்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
ஜாதவ், ஷீட்டல் என்னும் 18 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டு பின்னர், எல்லோரும் வியக்கும் வண்ணம் திருமண ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்று ஆசையில் இருந்துள்ளார்.
திருமண ஊர்வலம் என்பது அந்த ஊரில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆசை இருந்தும் முடியாத ஒன்றாகவே இத்தனை வருடங்கள் இருந்திருக்கிறது. காஸ்கஞ்சில் தாகூர் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் உயர் சாதிகளாக இருக்கின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் திருமணத்திற்கு ஊர்வலம் நடத்த விடுவதில்லை.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
இதனால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நடக்க வேண்டிய ஜாதவின் திருமணம், எப்போது திருமண ஊர்வலம் நடக்க அனுமதி கிடைக்கிறதோ அப்போது திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று அதுவரை நிறுத்தி வைத்தார். அதையடுத்து, அலஹாபாத் உயர்நீதி மன்றத்தை அணுகினார் ஜாதவ். நீதிமன்றமோ, இதற்கு காவலர்கள்தான் உதவி புரிய வேண்டும் என்று தெரிவித்ததன் பேரில் அவர் விடாமல் ஆன்லைனில் யோகி ஆதியானத்தின் தகவுக்கு புகார் அளித்தார். முதலில் மாவட்ட அரசு நிராகரித்தது. ஆனால்இறுதியில் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு 150 காவலர்களை அந்த ஊர்வலத்திற்கு பாதுகாப்பளிக்கச் செய்தனர்.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/wVZWzpA0h2w.jpg?itok=6umcc--_","video_url":"