டெல்லியில் காற்று மாசு அதிகமாகி கொண்டே இருக்கிறது என்று டெல்லி அரசாங்கமும், மத்திய அரசும் அதனை கட்டுப்படுத்த பல வழிகளை கொண்டுவந்துள்ளது. மேலும் மாசுவை கட்டுப்படுத்த, டெல்லியில் பயன்படுத்தப்படும் 15 ஆண்டு பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டு பழமையான டீசல் வாகன பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து பழமையான வாகனங்களின் பட்டியலை வெளியிடும்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் டில்லி போக்குவரத்து துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.