Skip to main content

தந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

பெங்களூருவை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தந்தையை தீ வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

15 year old bengaluru girl arrested

 

 

பெங்களூரு ராஜாஜிநகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் ஜெயின் (41). இவரது மனைவி பூஜாதேவி. இவர்களுக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். ஜெயக்குமாரின் மகள் தனது வீட்டின் அருகில் வசிக்கும் 18 வயது மாணவன் ஒருவனை காதலித்து வந்துள்ளார். ஜெய்குமாருக்கு இந்த விஷயம் தெரியவந்த நிலையில், அவர்கள் இருவரையும் கண்டித்ததோடு, தனது மகளின் செல்போனையும் பிடுங்கி வைத்துள்ளார்.

இந்த நிலையில் ஜெயக்குமாரின் மனைவி பூஜாதேவி தனது மகனுடன் குடும்ப விழா ஒன்றுக்காக, புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் ஜெயக்குமாரும், அவர் மகளும் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில், ஜெயக்குமார் வீட்டு பாத்ரூமில் இருந்து புகை வெளிவந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயை அணைத்தபோது, அங்கு ஜெயக்குமாரின் உடல் கருகிய நிலையில் கிடந்தது. இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் அவரது மகள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் விசாரனையை தீவிரப்படுத்திய நிலையில், தாய் பூஜாதேவி புதுச்சேரி சென்றதும் தனது அப்பாவுக்கு பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தூக்கமாத்திரை பாலை சாப்பிட்டு ஜெயக்குமார் தூங்கியதும், தனது காதலனை வீட்டுக்கு அழைத்துள்ளார் அந்த மாணவி. பின்னர் இருவரும் சேர்ந்து ஜெயக்குமாரை கத்தியால் குத்தியுள்ளனர். பிறகு அவரை குளியலறைக்கு இழுத்து சென்று பெட்ரோல் ஊத்தி எரித்துள்ளனர். எலெக்ட்ரிக் ஷாக் காரணமாக வீட்டில் தீ பிடித்தது என்று நாடகமாட திட்டமிட்டுள்ளனர். ஆனால் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் தற்போது இருவரும் சிக்கியுள்ளனர். இதையடுத்து ஜெயக்குமாரின் மகளையும், அவரது காதலனையும், போலீசார் கைதுசெய்தனர். அவர் மகளை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், பிரவீனை சிறையில் தள்ளினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்.ஐ.ஏ. 

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Bangalore HOTEL incident NIA made the important announcement

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ஓட்டலில் வெடித்தது வெடிகுண்டு தான். இது மிக வீரியம் கொண்ட ஐ.ஈ.டி. வெடிகுண்டு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஓட்டலில் யாரோ ஒருவர் பையை வைத்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்த பகுதிகளுக்கு சென்றாரோ அந்தந்த பகுதிகளில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Bangalore HOTEL incident NIA made the important announcement

இந்நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. இது குறித்து தேசியப் புலனாய்வு முகமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியின் கைதுக்கு வழிவகுக்கும் எந்த ஒரு தகவலுக்கும் ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும். தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். தகவல் அளிப்பவர்கள் 080-29510900, 8904241100 என்ற தொலைப்பேசி எண்களுக்கும், info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் எஸ்.பி., தேசியப் புலனாய்வு முகமை, 3வது தளம், பி.எஸ்.என்.எல். டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், 80 அடி சாலை, எச்.ஏ.எல். 2வது நிலை, இந்திரா நகர், பெங்களூரு, கர்நாடகா - 08 என்ற அஞ்சல் முகவரிக்கும் தெரிவிக்கலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

தமிழகத்திற்கு மற்றொரு வந்தே பாரத் ரயில் சேவை?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Another Vande Bharat train service to Tamil Nadu

இந்திய ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டபோது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நீலம் - வெள்ளை நிறம் மற்றும் காவி - சாம்பல் நிறத்திலும் இருக்கும் வகையில் இருக்கும் வகையில் வரை இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் - மைசூர், சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, கோயம்புத்தூர் - பெங்களூரு கண்டோன்மென்ட், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ஆகிய நகரங்கள் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே சார்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.