சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று ஒருநாள் சித்திரை திருநாள் ஆட்ட விசேஷ பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலையைச் சுற்றியுள்ள பம்பா, நிலக்கல் இலவங்கல், சன்னிதானம் போன்ற பகுதிகளில் 144 தடை உத்தரவும், 2,000 போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் கொண்ட கமாண்டோ படையும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

ss

சபரிமலைக்கு வரும் பெண்களைப் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினால், அவர்களை தடுப்பு காவலில் வைக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Advertisment