125 நகரங்களில் 31ம் தேதி வரை தொடர் ஊரடங்கு - மம்தா அறிவிப்பு!

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் கரோனா தாக்குதலுக்கு உயிரிழப்புக்கள் தொடர்கின்றது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதனை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்று இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 125 நகரங்களில் இந்த ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில மக்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம் என்றும், அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

mamta banarji
இதையும் படியுங்கள்
Subscribe