Skip to main content

உச்சநீதிமன்ற பகுதியில் பரபரப்பு: 144 தடை உத்தரவு அமல்...

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

டெல்லியில் உச்சநீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

144 imposed outside supreme court of india

 

 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவருடைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய 35 வயதாகும் பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். ஆனால் குற்றம் சாட்டிய அந்த பெண் விசாரணைக்கு ஒத்துழைக்காததாலும், ரஞ்சன் கொக்காய்க்கு எதிராக எந்த ஆதாரங்களுக்கும் இல்லாததாலும் அவர் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்வதாக நீதிபதி பாப்டே தலைமையிலான குழு நேற்று அறிவித்தது. இதனை எதிர்த்து பெண் வழக்கறிஞர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பிருப்பதால் உச்சநீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கிய ரஞ்சன் கோகாய்க்கு கரோனா என்பது உண்மையா..?...

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

ranjan gogoi tested positive for corona

 

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என பரவிய தகவல் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. . 

 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களைப் பாதித்துள்ள கரோனா வைரஸ் இந்தியாவில், சமீபகாலமாகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் இந்த வைரஸால் 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ராமர் கோயில் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் பரவின. இந்நிலையில் இந்த தகவல்களை ரஞ்சன் கோகாய் மறுத்துள்ளார்.

 

Next Story

மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்! 

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை நியமன எம்.பியாக பதவியேற்றார். மாநிலங்களவையில் ரஞ்சன் கோகாய்க்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

supreme court former chief justice ranjan gogoi take oath as rajay sabha

இந்த நிலையில் ரஞ்சன் கோகாய் எம்.பியாக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.