அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், அதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கரோனா தொற்று பயம் காரணமாகவும் 175 பேர் மட்டுமே விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கான விழா ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் அயோத்தியில் தொடங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பலப்படுத்தும் நோக்கில் கர்நாடகாவில் கல்புர்கியில் இன்று மதியம் 3 மணி முதல் வரும் 6ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.