Advertisment

திரிபுராவில் 14 வயது சிறுமியை கற்பழித்த 58 வயது முதியவர் கைது!

திரிபுராவில் 14 வயது சிறுமியை பண்ணைவீட்டில் அடைத்துவைத்து பாலியல் வன்புணர்வு செய்துவந்த 58 வயது முதியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisment

Child

திரிபுரா மாநிலத்தில் உள்ள கோவாய் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் கோஷ் (58). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை தனது பண்ணை வீட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அடைத்துவைத்து, தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் அந்த சிறுமியை மிரட்டி வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பண்ணை வீட்டில் இருந்து தப்பியோடிய சிறுமி,தனது உறவினர்களின் உதவியுடன் காவல்துறையினரிடம் இதுகுறித்துபுகாரளித்துள்ளார்.

Advertisment

தன்னை பண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்த மனோஜ் கோஷ், 11 முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக புகாரளித்துள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி. இதையடுத்து, மனோஜ் கோஷ் மீது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனோஜ் கோஷ் அகில பாரத விகாஷ் பரிஷத் என்ற அமைப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் கோஷ் விஷ்வ இந்து பரிஷத் என்ற இந்துத்வ அமைப்பைச் சேர்ந்தவர் என சி.பி.எம். தலைவர் சுபிர் சென் தெரிவித்துள்ளார். ஆனால், வி.எச்.பி. அமைப்பு இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

tripura POCSO Child abuse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe