Advertisment

14 வயது சிறுவனை தலைகீழாக தொங்கவிட்டு கொடுமைப்படுத்திய கொடூரக் கும்பல்!

A 14-year-old boy was hanged upside down by a cruel gang in madhya pradesh

மத்தியப் பிரதேசத்தின் பந்தூர்னா மாவட்டத்தில், கைக்கடிகாரத்தைத் திருடியதை ஒப்புக்கொள்ள 14 வயது சிறுவனைக் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இது தொடர்பான வீடியோவில், 14 வயது சிறுவனை ஒரு கும்பல் கைக்கடிகாரத்தை திருடியதை ஒப்புக்கொள்ளுமாறு கூறி தலைகீழாக தொங்க விட்டு அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும், தலைக்கு கீழே சூடான நிலக்கரியை வைத்து அதில் மிளகாயை எரித்து அந்த புகையை சுவாசிக்க செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இந்த வீடியோவை கண்ட பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தவர்களை அடையாளம் கண்டனர். அதன்படி, என்கே டிரேடர்ஸின் உரிமையாளர் ஓம்கார் பிரம்மே மற்றும் அவரது கூட்டாளிகளான நிகில் கல்ம்பே, சுரேந்திர பவான்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் கூறுகையில், ‘நானும் என் நண்பரும் என்கே டிரேடர்ஸுக்கு சென்றிருந்தோம். அப்போது, அங்கிருந்த கல்ம்பேயும் பாவாங்கரும் நான் கைக்கடிகாரத்தைத் திருடியதாகக் குற்றம் சாட்டினார்கள். நான் அதை மறுத்ததால், என் கால்களை கயிற்றால் கட்டி, தகர கொட்டகையில் தலைகீழாக தொங்கவிட்டனர். மேலும் எனது கைகளை பின்னால் இருந்து கட்டி தடியால் அடித்தனர். மிளகாயை தீயில் எரித்து, புகையை சுவாசிக்குமாறுஎன்னை வற்புறுத்தினார்கள்’ என்று கூறினார்.

Theft
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe