Advertisment

உலகில் 15 நகரங்களில் 14 இந்திய நகரங்கள் மாசடைந்த நகரங்கள்  

உலகில் காற்றுமிகவும் மாசடைந்த 15 நகரங்களின் பட்டியலை உலக சுகாதார மையம் இன்று வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள15நகரங்களில் இந்தியாவில் மட்டும் 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அவை கான்பூர், பரிதாபாத், வாரணாசி, கயா, பாட்னா, டெல்லி, லக்னோ, ஆக்ரா, முஸ்ப்பிபார்பூர், ஸ்ரீ நகர், குர்கான், பாட்டியாலா, ஜோத்புர், ஜெய்ப்பூர். இந்த நகரங்களில் முதலிடத்தில் 173 மைக்ரோ கிராம்சுடன் கான்பூர் உள்ளது. தலைநகர் டெல்லி நான்காம் இடத்தில் உள்ளது. உலகமுழுவதும் நூறு நாடுகளில் 4000 நகரங்களில் உலக சுகாதார மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. டெல்லியில் காற்று மாசு 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் குறைந்திருந்தது. ஆனால் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கான புள்ளி விவரத்தின் படி டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமடைந்தது.

Advertisment

14 india'spollution citis

டெல்லியில் காற்றில் உள்ள மாசு ஓராண்டுக்கு சராசரியாக 2.5 செறிவுகளும், 143 மைக்ரோகிராம்களாகஉள்ளது. இதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டு வந்த ஆய்வறிக்கைபடி பத்து இந்திய நகரங்கள் மட்டும் இருந்தன. 2011 டெல்லி மற்றும் ஆக்ரா என இரு நகரகங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தன. அதன்பின் இந்திய நகரங்களின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கத் தொடங்கியது அப்போது 20 நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது இன்று 15 நகரங்கள் பட்டியலை வெளியிட்டதில் 14 இந்திய நகரம் மீண்டும் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து அறிவியல் மற்றும் சுற்றுசூழல் நிர்வாக இயக்குநர் அனுமித் ராய் சௌத்ரி கூறுகையில், "இந்திய நகரங்களில் உள்ள காற்று மாசுபடுதலை நாங்கள் அதனை கண்காணித்து வருகின்றோம். அதற்கான புரிதல் எங்களிடம் உள்ளது. 2016 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லி மிகவும் மாசடைந்தது அதனை கட்டுப்படுத்த பலவழிகளை மேற்கொண்டோம். இதுபோன்று வேறு நகரங்களில் ஏற்படாமல் இருக்க இனி வரும் காலங்களில் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Advertisment
world health organaization Varanasi tajmahal Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe