/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/obs.jpg)
உத்தரபிரதேசம் மாவட்டம், மெயின்புரி மாவட்டத்தின் பாஜக மகிளா மோர்ச்சா தலைவரின் மகன் இடம்பெறும் 130 ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோக்கள், நகரத்தின் பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் எடுக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பா.ஜ.க பெண் தலைவரின் மகன், தனது மனைவியை விட்டு பிரிந்து நான்கு ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகிறார். அவரது மனைவி தனது கணவர் சிகரெட்டை எரித்து சித்ரவதை செய்கிறார் என்று சில தினங்களுக்கு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால், அது அரசியல் குடும்ப விஷயம் என்பதால் அந்த விஷயம் மூடி மறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ந்த நபர் தனது காதலியுடன் இருக்கும் வீடியோக்களை எடுத்து தனது மனைவியிடம் காட்டி மனரீதியாக சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் அரசியல் புயலை கிளப்பியுள்ளது.
திடீரென வைரலாகப் பரவிய 130 வீடியோக்கள், அவை எவ்வாறு கசிந்தன என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் இந்த வீடியோக்களில் இருப்பது அந்த நபரா, அவரது காதலி என்று கூறப்படுபவரா அல்லது வேறு வழிகள் மூலம் வெளியிடப்பட்டதா என்பது குறித்து கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாஜக மௌனம் காத்து வருகிறது. மகளிர் பிரிவு முதல் மாவட்ட அமைப்பு வரையிலான பா.ஜ.க கட்சியினர் கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றனர். இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)