vinayagar

Advertisment

மும்பையில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சில பந்தலில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர சம்பவம் விநாயகர் சிலை கொண்டாட்டத்தின் போது 24 வயதுடைய இளைஞரால் நிகழ்ந்துள்ளது.

'கடந்த திங்கட்கிழமை இரவு, அகர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக 13 வயது சிறுமி, தனது தோழிகளுடன் சென்றபோது. அங்கிருந்த பந்தலில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. வழிபாட்டுக்கு வந்த 13 வயது சிறுமியிடம் இவர் ஆசை வார்த்தைகள் பேசி தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர், அந்த பந்தலுக்கு பின்னே அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பித்து ஓடியுள்ளார்.

Advertisment

பின்னர் வீடு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவத்தை தன் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இக்கொடூர செயலை செய்தவர் மீது போலிஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. தலைமறைவாக இருக்கின்ற அந்த இளைஞரை போலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.