Advertisment

தந்தை, மாமா, சகோதரனால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்

13-year-old girl incident happened by father, uncle, brother at madhya pradesh

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில், குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், குட் டச், பேட் டச் பற்றி பாடம் நடத்தப்பட்டது. அப்போது, அந்தப் பள்ளியில் பயின்று வரும் 13 வயது பெண் குழந்தை தனக்குநேர்ந்த அவலத்தைப் பற்றி பயிற்சி நடத்துபவரிடம் தெரிவித்துள்ளார்.

அதில் அந்தச் சிறுமி தனது தந்தை, தூரத்து உறவினர் முறையிலான சகோதரன் மற்றும் மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத்தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறுமி அவரது தூரத்து உறவினர் முறையிலான சகோதரனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வெளியே சொன்னால், சிறுமியைக் கொலை செய்துவிடுவேன் என்று அவர் மிரட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி 2024ஆம் ஆண்டு சிறுமி அவரது மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, சிறுமி அவரது தந்தையால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. 13 வயது சிறுமி தொடர்ச்சியாக தனது சொந்த குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe