Advertisment

தந்தையே கற்பழித்ததால் மனமுடைந்த 13 சிறுமி தற்கொலை!

தனது சொந்த தந்தையால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Child

பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ளது மஜவுலியா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் தந்தை, அவருக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு தந்துவந்துள்ளார். இதுதொடர்பாக ஊர்ப்பஞ்சாயத்தில் சிறுமி மற்றும் அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் ஊர்ப்பெரியவர்களால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அங்கு குற்றவாளிக்கு பெரிய தண்டனை எதுவும் வழங்காத நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி ஊரைவிட்டு வெளியேறியுள்ளார். பின்னர் அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்துவந்த நிலையில், தொடர் மனஉலைச்சல் காரணமாக சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். தற்போது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

POCSO Child abuse
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe