இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் கடந்த ஜூன் 3ஆம் தேதி மதியம் 12.25 மணிக்கு அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டது.

Advertisment

13 persons lost life in an32 flight accident

புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அந்த விமானம் இழந்தது. இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய விமானப் படை, இந்திய ராணுவம் உள்ளிட்டவர்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒருவார கால தேடுதலுக்குப் பிறகு அந்த விமானத்தின் பாகங்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் லிப்போ பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தேடுதல் பணியாளர்கள் இன்று லிப்போ பகுதியை சென்றடைந்தனர். இந்தச் சூழலில் தற்போது விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக விமானப்படை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வகை விமானம் இரு முறை விபத்துக்குள்ளாகி அதில் 34 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.