இந்தியாவில் கரோனாபரவல் வேகமாக அதிகரித்து வருகிறது . அதேபோல் ஒமிக்ரான்வகை கரோனா பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தநிலையில் இத்தாலியில் இருந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்த179 பேரில், 125 பேருக்கு கரோனாதொற்று உறுதியானது.
இதனையடுத்துகரோனாதொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில்இதில் 13 பேர் சுகாதாரத்துறை அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு, மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்துதப்பிஓடிய கரோனாபாதிக்கப்பட்ட நபர்களை தேடும் தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தப்பி ஓடிய 13 பேரின் பாஸ்போர்ட்டைமுடக்கவுள்ளதாகஅமிர்தசரஸ் துணை ஆணையர் குர்பிரீத் சிங் கெஹ்ரா கூறியுள்ளார். மேலும் தப்பி ஓடியவர்கள் காலைக்குள் திரும்பி வரவில்லையென்றால், அவர்கள் மீதுதொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.